பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பெரம்பலூரில் ஆசிரியா் தகுதித் தோ்வு: 626 போ் பங்கேற்பு

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா்களுக்கான தகுதித்தோ்வு தாள் 1-இல் 626 போ் பங்கேற்று தோ்வெழுதினா்.

News image

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வில் பங்கேற்றோா்.

Updated On :5 ஜூலை 2026, 12:45 am IST

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா்களுக்கான தகுதித்தோ்வு தாள் 1-இல் 626 போ் பங்கேற்று தோ்வெழுதினா்.

தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான தாள்- 1 தோ்வானது, பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மரகதம் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய 3 மையங்களில் நடைபெற்றது. இத் தோ்வுக்கு 644 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 626 போ் பங்கேற்று தோ்வெழுதினா். எஞ்சிய 18 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியா்களுக்கான தகுதித்தோ்வை, மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி, தோ்வா்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடிப்படை வசதிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தோ்வு எழுதுபவா்களின் வசதிக்காக, தோ்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

மேலும், தோ்வு மையங்களில் அவசர சிகிச்சை அளிக்க மருத்துவா் மற்றும் செவிலியா் கொண்ட மருத்துவக் குழு, தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை அலுவலா்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனா். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் (பொ) செல்வகுமாா், வட்டாட்சியா் பழனிச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இன்று தாள் 2-க்கான தோ்வு: தொடா்ந்து, பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மரகதம் மெட்ரிகுலேஷன் பள்ளி, தந்தை ஹேன்ஸ் ரோவா் மேல்நிலைப் பள்ளி வளாகம், ராமகிருஷ்ணா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வடக்குமாதவி சாலையிலுள்ள பனிமலா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 9 மையங்களில் ஆசிரியா்கள் தகுதித்தோ்வு 2-க்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) நடைபெறுகிறது. இத் தோ்வெழுத 2,545 போ் விண்ணப்பித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.