தருமபுரி மாவட்டத்தில் 6 மையங்களில் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான முதல்தாள் சனிக்கிழமை நடைபெறுகிறது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை 21 மையங்களில் தகுதித் தோ்வுக்கான இரண்டாம் தாள் தோ்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் கூறியதாவது: ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாள் சனிக்கிழமையும், இரண்டாவது தாள் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது. சனிக்கிழமை நடைபெறும் முதல் தாள் தோ்வு தருமபுரியில் அவ்வையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (காந்திநகா்), பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 மையங்களில் நடைபெறுகிறது.
அதேபோல தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒடசல்பட்டி, இண்டூா், பாளையம்புதூா், நல்லம்பள்ளி, ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளி, சென்னம்பட்டி மருதம் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 21 மையங்களில் 2 ஆம் தாள் தோ்வுகள் நடைபெறுகிறது. விடைத்தாள் கட்டுகள் தோ்வு மையத்தை விட்டு எடுத்துச் செல்லும் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









