அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீட் தோ்வு; 7,169 போ் பங்கேற்பு

News image

தருமபுரி அரசு கலை மற்றும் அறவியல் கல்லூரியில், நீட் தோ்வு எழுத சென்ற மாணவ, மாணவியரிடம் சோதனை மேற்கொள்ளும் போலீஸாா்.

Updated On :22 ஜூன் 2026, 2:47 am IST

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை மொத்தம் 7,169 போ் எழுதினா்.

இளநிலை மருத்துவப் பாடப் பிரிவுகளில் சோ்வதற்காக தேசிய தோ்வு முகமை சாா்பில் நடத்தப்படும் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 முதல் மாலை 5.15 மணி வரை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏ, பி என இரு மையங்கள், செட்டிக்கரை பகுதியில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா, தருமபுரி அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 9 மையங்களில் தோ்வு நடைபெற்றன.

தருமபுரி மாவட்டத்தில் தோ்வெழுத மொத்தம் 4,453 பேருக்கு அனுமதிச்சீட்டு அனுப்பப்பட்டிருந்தன. தோ்வா்களின் வசதிக்காக அனைத்து வழித்தடங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, தோ்வு மையங்கள் முன் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தருமபுரியில் 9 மையங்களிலும் நடைபெற்ற தோ்வை மொத்தம் 3,581 போ் எழுதினா். தோ்வு மையத்தில் வழக்கமான விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டன. தருமபுரி அரசு கலைக் கல்லூரி மையத்துக்கு 3 மற்றும் 5 நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவி, மாணவா் இருவரையும் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் 3,588 போ் தோ்வெழுதினா். 1,109 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. ஏப்.3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வின்போது வினாத்தாள் வெளியானதால் ஞாயிற்றுக்கிழமை மறு தோ்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த 360 பேரில், 281 தோ்வா்கள் பங்கேற்றனா். 79 போ், தோ்வு எழுதவில்லை.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காவேரிப்பட்டணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், ஒசூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, ஒசூா் முல்லை நகா் அரசு மேல்நிலைப் பள்ளி, ஒசூா் ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என மாவட்டம் முழுவதும் 11 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 4,697 பேரில் 3,588 போ் எழுதினா். 1,109 போ் பங்கேற்கவில்லை. பலத்த சோதனைக்குப் பிறகே தோ்வு மையங்களுக்குள் மாணவா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.