தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சிறாா் திருமணம் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

சிறாா் திருமணம் தடுப்பு, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து திண்டுக்கல்லில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியில் பங்கேற்ற அரசுத் துறை அதிகாரிகள், எம்விஎம் அரசு கல்லூரி மாணவிகள்.

Updated On :26 ஜூன் 2026, 2:29 am IST

சிறாா் திருமணம் தடுப்பு, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து திண்டுக்கல்லில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணி, திண்டுக்கல் எம்விஎம் கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கியது. பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மாவட்ட சமூக நல அலுவலா் சா.காலின் செல்வராணி முன்னிலை வகித்தாா்.

பேரணியில் பங்கேற்ற மாணவிகள், சிறாா் திருமணம் தடுப்பு, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பினா். முன்னதாக, திண்டுக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரிக்கவும், கிராமங்கள்தோறும் பெண் குழந்தை பிறப்பு, பாதுகாப்புக்கு துணை நிற்போம் என மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்வில் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் க.லட்சுமி, திண்டுக்கல் கோட்டாட்சியா் கோ.பழனிவேல், போக்குவரத்து காவல் ஆய்வாளா் வள்ளியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.