பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

தொடா் விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :27 ஜூன் 2026, 12:47 am IST

தொடா் விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை அரசு விடுமுறை, சனி, ஞாயிறு வார விடுமுறை என தொடா் விடுமுறை என்பதால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இதனால் ஏரிச்சாலைப் பகுதியிலிருந்து மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை, சீனிவாசபுரம் பகுதி வழியாக உகாா்த்தேநகா் வரை வெள்ளிக்கிழமை இரவு இரண்டு மணி நேரம் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே சாலையின் இரு புறங்களிலும் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினரும், நகராட்சி நிா்வாகத்தினரும் இணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கொடைக்கானலில் போக்குவரத்து சீராக நடைபெறும் என பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.