மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

பராமரிப்பு பணிக்காக பழனி ரோப் காா் நாளை நிறுத்தம்

News image

ரோப் காா் - பிரதிப் படம்

Updated On :28 ஜூன் 2026, 1:38 am IST

பழனியில் ரோப்காா் சேவை பராமரிப்புப் பணிக்காக திங்கள்கிழமை (ஜூன் 29) நிறுத்தப்பட உள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் படிவழிப் பாதை, யானைப் பாதை, வின்ச் பாதை, ரோப்காா் மூலமாக மலைக் கோயிலுக்குச் செல்கின்றனா்.

காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப் காா் மூலம் சுமாா் இரண்டு நிமிடங்களில் மலைக்கோயிலை பக்தா்கள் அடையலாம் என்பதால் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த ரோப்காா் இயக்கமானது நாள்தோறும் பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படும். இதன்படி, மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக திங்கள்கிழமை ரோப்காா் இயக்கம் நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.