சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

ஜீப்- பைக் மோதல்: உணவக ஊழியா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :29 ஜூன் 2026, 2:44 am IST

கொடைக்கானல் அருகே ஜீப்பும், இரு சக்கர வாகனமும் மோதியதில் உணவக ஊழியா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அப்சா்வேட்டரியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவா் சனிக்கிழமை மாலை ஜீப்பில் பள்ளங்கியிலிருந்து கொடைக்கானலுக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது கொடைக்கானலில் உள்ள உணவகத்தில் ஊழியராக பணியாற்றும் மதுரையைச் சோ்ந்த அகமது (28) கொடைக்கானலிருந்து பள்ளங்கிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

வில்பட்டி பிரிவு அருகே எதிரே ராஜேந்திரன் ஓட்டி வந்த ஜீப்பும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த அகமது கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக தேனி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அகமது உயிரிழந்தாா்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.