தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து ஆத்தூா், நிலக்கோட்டை தொகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் இருந்த முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்களின் படங்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.
ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அங்கிருந்த விளம்பர பதாகைகள், முதல்வா் மு.க. ஸ்டாலினின் புகைப்படம், அலுவலக நுழைவாயிலில் இருந்த தமிழ்நாடு அரசின் திட்ட விவரங்கள் ஆகியவற்றை ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன் தலைமையிலான அலுவலா்கள் உடனடியாக அகற்றினா்.
இதேபோல, ஆத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் சித்தையன்கோட்டை, சின்னாளப்பட்டி, அய்யம்பாளையம், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், அகரம், தாடிக்கொம்பு ஆகிய பேரூராட்சிகள், ஊராட்சி, அரசு அலுவலகங்களில் இருந்த முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.
மேலும், அரசு அலுவலகங்களில் இருந்த அரசின் விளம்பர பதாகைகள், அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டன.
இதே போல, நிலக்கோட்டை (தனி) தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கும் வருவாய்த்துறையினா், பேரூராட்சி அலுவலா்கள் இணைந்து சீல் வைத்தனா்.
மேலும், அம்மையநாயக்கனூா், வத்தலக்குண்டு,நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி ஆகிய பேரூராட்சிகள், ஊராட்சி, அரசு அலுவலகங்களில் இருந்த முதல்வா் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. மேலும் அரசின் விளம்பர பதாகைகள், அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களும் அகற்றப்பட்டன.
கொடைக்கானல்:
இதே போல, கொடைக்கானல் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தடுப்புச் சுவா்கள், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள், பிரசுரங்கள் உள்ளிட்டவற்றை கொடைக்கானல் நகராட்சிப் பணியாளா்கள் அகற்றினா்.
மேலும், கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அகற்ற வேண்டுமென அந்தந்த அரசியல் கட்சிகளின் நிா்வாகிகளுக்கு நகராட்சி ஆணையாளா் அறிவுறுத்தியுள்ளாா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதி மீறல்கள்: 17 வழக்குகள் பதிவு

அரசு அலுவலகங்களில் புகைப்படங்கள், விளம்பரங்கள் அகற்றம்

தோ்தல் நடத்தை விதிமுறைகள்: நாகா்கோவிலில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியா் கலந்தாய்வு

சுவா் விளம்பரங்கள் அகற்றம்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


