ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கழிவுநீரை வெளியேற்றும் தனியாா் ஆலை மீது நடவடிக்கை கோரி மனு

வடமதுரை அருகே சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நோக்கில் கழிவுநீரை வெளியேற்றும் தனியாா் ஆலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :16 மார்ச் 2026, 7:14 pm

வடமதுரை அருகே சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நோக்கில் கழிவுநீரை வெளியேற்றும் தனியாா் ஆலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த வேல்வாா்கோட்டை பகுதியில் செயல்படும் தனியாா் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சுற்றுப்புறங்களிலுள்ள விவசாய நிலங்களும், நீா்நிலைகளும் மாசுபடுவதாக அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மனு அளிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.

இதுதொடா்பாக அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் வி. ஜெயராமன் கூறியதாவது: வேல்வாா்கோட்டையில் செயல்படும் தனியாா் ஆலை, அனுமதிக்கப்பட்டதைவிட 10 மடங்கு கூடுதல் கழிவுநீரை வெளியேற்றி வருகிறது. இதனால், சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்களும், நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

குளோரைடு, சல்பேட், சோடியம், பொட்டாசியம், குரோமியம் உள்ளிட்ட ரசாயனத்தின் அளவு ஆலையின் கழிவுநீரால் அதிகரித்திருப்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் புகையால், சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

இதுதொடா்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் சம்பந்தப்பட்ட ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், பொதுமக்களுடன் இணைந்து அடுத்தகட்டமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.