எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அதிக அளவு முன்பதிவு செய்ததால் ஏற்பட்ட பிரச்னை, ஓரிரு நாள்ளில் சீராகும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: எரிவாயு உருளைகள், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது தொடா்பாக திண்டுக்கல் மாவட்ட எரிவாயு, எண்ணெய் நிறுவனங்களின் மண்டல விற்பனை மேலாளா்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் போதிய அளவில் கையிருப்பு உள்ளதாகவும், மருத்துவம், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு விநியோகம் சீரான நிலையில் உள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் வழக்கத்தைவிட அதிகளவு முன் பதிவு செய்த காரணங்களால் பதிவு செய்தல், விநியோகம் செய்தல் போன்றவற்றில் தாற்காலிகப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் இந்தப் பிரச்னையும் சீரடைந்து விடும். எனவே, பொதுமக்கள் எவ்வித பதட்டமும் இல்லாமல், வழக்கம்போல எரிவாயு உருளையை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
எரிவாயு உருளைகளை தேவைக்கு அதிகமாக பதுக்கி வைப்போா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வணிக ரீதியான எரிவாயு உருளைகள் விதிமுறைகளுக்கு முரணாக பதுக்கி வைத்தல், கூடுதல் விலைக்கு விற்பனை
செய்யப்படுவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும். கேன், புட்டிகளில் வழங்குவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனம் முற்றுகை

பெரம்பலூா் அருகே வீட்டு உபயோக எரிவாயு உருளை தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

தஞ்சாவூரில் 2 நாள்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

திருச்சியில் சமையல் எரிவாயு உருளைகளுக்குத் தட்டுப்பாடு: பொதுமக்கள் அச்சம்; உணவகங்கள் மூடப்படும் அபாயம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


