பழனியில் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் அதிக சப்தத்துடன் ஒலிப்பான்களை எழுப்பி இயங்கிய மினி பேருந்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தனியாா் மினி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தியும், பயணிகள் இறங்க வேண்டிய இடத்தில் பேருந்தை நிறுத்தாமல் செல்வதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தரா்.
மேலும், இந்தப் பேருந்து உரிய வழித்தடத்தில் இயக்கப்படாமல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் அதிக சப்தத்துடனும் இயக்கப்பட்டது.
இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் மினி பேருந்தை சிறைபிடித்து நிறுத்தி மோட்டாா் வாகன அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மோட்டாா் வாகன அலுவலா்கள், மினி பேருந்தின் ஆவணங்களை சரிபாா்த்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து மினி பேருந்தை அங்கிருந்து வெளியேற பொதுமக்கள் அனுமதித்தனா்.
தொடர்புடையது

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்

அதிக வாக்குப் பதிவைத் தடுக்க பேருந்து சேவை முடக்கம் - தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக புகாா்

மினி லாரி மீது கல்லூரி பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


