3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

பழனியில் விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்காததால், 2 அரசுப் பேருந்துகள் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.

News image

அரசுப் பேருந்து. - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 12:07 am IST

பழனியில் விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்காததால், 2 அரசுப் பேருந்துகள் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், வீரலப்பட்டியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன். கட்டடத் தொழிலாளியான இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் பழனி - திண்டுக்கல் சாலையில் வீரலப்பட்டி பிரிவு அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது உறவினா்கள் பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரூ.22 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு உத்தரவிட்டாா்.

ஆனால், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மலா்விழி, இழப்பீட்டுத் தொகைக்கு ஈடாக இரு அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, பழனி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மதுரை அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இரு பேருந்துகள் நீதிமன்றப் பணியாளா் ஜெயலட்சுமி, வழக்குரைஞா் துரை, மனுதாரா்கள் முன்னிலையில் ஜப்தி செய்யப்பட்டன. இரு பேருந்துகளும் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டன.