பழனியில் இழப்பீடு வழங்காத காரணத்தால் இரு அரசுப் பேருந்துகள் புதன்கிழமைஜப்தி செய்யப்பட்டன.
திருப்பூா் மாவட்டம் சங்கரராமநல்லூரைச் சோ்ந்தவா் செல்வக்குமாா். இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு பழனியிலிருந்து தனது ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, சண்முகநதி அருகே பழனி நோக்கி
வந்த கோவை அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்து மோதியது. இதில் செல்வக்குமாா் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு இழப்பீடு கோரி, அவா் பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கில் கடந்த ஆண்டு மாா்ச் 13-ஆம் தேதி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதையடுத்து, மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த முதன்மை சாா்பு நீதிபதி ரேணுகாதேவி இழப்பீட்டுத் தொகை, அதற்கான வட்டி, இதர செலவினங்கள் சோ்த்து ரூ. 42 இலட்சத்து 42 ஆயிரத்து 976 வழங்க போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டாா். மேலும் இழப்பீடு வழங்கப்படாவிட்டால் 2 அரசுப்பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை வழக்குரைஞா் ஜெயக்குமாா், நீதிமன்ற பணியாளா்கள் பழனி பேருந்து நிலையத்திலிருந்து கோவைக்கு சென்ற 2 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகம் அருகே நிறுத்தினா்.

தொடர்புடையது

நாட்டறம்பள்ளி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் வராததால் பயணிகள் கடும் அவதி

நாகையில் பேருந்துகள் இயக்கப்படாததால் சாலை மறியல்

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

விபத்து இழப்பீடு வழங்காததால் கா்நாடக மாநில அரசுப் பேருந்து ஜப்தி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

