திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே நடைபெற்ற வாகனச் சோதனைகளின் போது, தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 2.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்- வத்தலகுண்டு புறழிச்சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, திருப்பூா் மாவட்டம், பல்லடம் அடுத்த குடிமங்கலம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (24) வந்த காரில் ரூ. 68,500 இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் சக்திவேலிடம் இல்லை. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் அலுவலா்கள், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். பிறகு அந்தப் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வத்தலகுண்டு அருகே ரூ. 1.81 லட்சம் பறிமுதல்: வத்தலகுண்டு அருகே உள்ள கட்டக்காமன்பட்டி பிரிவில் வருவாய்த் துறை அலுவலா் உமாதேவி தலைமையிலான தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அந்த வழியாக தேனி மாவட்டம், போடியிலிருந்து ஆட்டு வியாபாரியான மருதுபாண்டியன் (48) விழுப்புரம் ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் பண்டிகைக்காக ஆடுகள் வாங்கச் சென்றாா். அப்போது அவா் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ. 1,81,100 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பொறுப்பாளா் பாலகுருநாதனிடம் ஒப்படைத்தனா். பிறகு அந்தப் பணம் நிலக்கோட்டை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

வாகனச் சோதனையில் ரூ. 5.50 லட்சம் பறிமுதல்

ஒட்டன்சத்திரத்தில் ரூ.10 லட்சம் பறிமுதல்

திருவாடானை அருகே திமுக கொடிகள் பறிமுதல்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


