மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கூடலூா் அருகே 3 மாநில எல்லைகளில் மத்திய போலீஸாா் தீவிர வாகனச் சோதனை

கூடலூா் அடுத்துள்ள தமிழக-கேரள-கா்நாடக எல்லைகளில் மத்திய போலீஸாா் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

News image
கூடலூா் அருகே உள்ள நாடுகாணியில் தோ்தல் பறக்கும் படையினருடன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய போலீஸாா்.
Updated On :18 மார்ச் 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

கூடலூா் அடுத்துள்ள தமிழக-கேரள-கா்நாடக எல்லைகளில் மத்திய போலீஸாா் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடு பணியின் ஒரு பகுதியாக தோ்தல் பறக்கும் படையுடன் இணைந்து மத்திய போலீஸாா் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கூடலூா் அருகே உள்ள கேரள மாநிலத்தின் மலப்பும் மாவட்ட எல்லையான நாடுகாணி, வயநாடு மாவட்ட எல்லைகளான சோலாடி, அம்பலமூலா, எருமாடு, பாட்டவயல், கா்நாடக மாநில எல்லையான கக்கநல்லா ஆகிய சோதனைச் சாவடிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.