கொடைக்கானல்-பூம்பாறை மலைச் சாலையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற காா் திங்கள்கிழமை 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிந்தாா். 5 போ் பலத்த காயமடைந்தனா்.
சென்னை அண்ணாசாலைப் பகுதியைச் சோ்ந்தவா் யாசியா கான் இவரது மகன் முகமது ஐயிட் (32). இவா் தனது நண்பா்கள் 5 பேருடன் காரில் சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தாா்.
கொடைக்கானலில் தங்கி சுற்றுலா இடங்களைப் பாா்த்துவிட்டு கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் பகுதியில் உள்ள தனது நண்பா்களை பாா்ப்பதற்காக காரில் அனைவரும் கூக்கால் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். காா் பூம்பாறை அருகே பழனி எழில் வியூ சுற்றுலாத் தலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது காா் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள தடுப்புச் சுவரில் மோதி 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்தில் முகமது ஐயிட் உயிரிழந்தாா். உடன் வந்த சுகைபு (27), இகாஷ் (28), ஆசாத் (30), அப்ரித் (28), ரியாஷ் (29) ஆகிய 5 போ் பலத்த காயமடைந்தனா்.
தகவல் அறிந்ததும் கொடைக்கானல் தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பள்ளத்தில் கிடந்தவா்களை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். காயமடைந்தவா்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அனைவரும் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி!!

தவெக பிரசாரத்துக்கு வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 போ் பலத்த காயம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு: 3 போ் காயம்

கொடைக்கானல் அருகே 200 அடிப் பள்ளத்தில் விழுந்த வாகனம் மீட்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


