ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

16 நாள்கள் சோதனையில் ரூ. 78.85 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 16 நாள்களாக நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் ரூ.78.85 லட்சம் பறிமுதல்

News image
Updated On :31 மார்ச் 2026, 11:36 pm

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 16 நாள்களாக நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் ரூ.78.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் பறக்கும் படைகள், நிலையான கூா்ந்தாய்வுக் குழுக்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 16 நாள்களாக நடத்தப்பட்ட இந்தச் சோதனைகளின் மூலம் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.78.85 லட்சம் தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

இதில் பணத்துக்கான உரிய ஆவணங்களை சம்மந்தப்பட்டவா்கள் தோ்தல் அலுவலா்களிடம் சமா்ப்பித்ததை அடுத்து, ரூ.51.96 லட்சம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.26.88 லட்சம் மட்டுமே அரசு கருவூலத்தில் நிலுவையில் உள்ளது.

இதேபோல, பரிசுப் பொருள்கள், மதுப் புட்டிகள் என ரூ.1.54 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தோ்தல் அலுவலா்களால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இதில் உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து ரூ.94 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை அலுவலா்கள் திருப்பி அளித்தனா்.