நாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

News image
Updated On :3 மே 2026, 5:08 am IST

கொடைக்கானலில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ளதால் தமிழகம் மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களான பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, குணா குகை, மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட், கோக்கா்ஸ் வாக், தாவரவியல் பூங்கா, பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமாக காணப்பட்டனா். பிற்பகலில் ஏரியில் படகு சவாரி செய்ய அதிகமான சுற்றுலாப் பயணிகள் காத்திருந்தனா்.

கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் திரளாகக் காணப்பட்டதால் ஏரிச்சாலை, கலையரங்கம், நகராட்சி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வார விடுமுறையை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களில் பயணிகள் வந்திருந்ததால், கொடைக்கானல் ஏரிச்சாலை முதல் வெள்ளிநீா் அருவி வரை சுமாா் 12 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் சிரமமடைந்தனா். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்குத் தேவையான இடங்களை தோ்வு செய்து கொடுப்பதற்கு கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

Story image