நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

கொடைக்கானல் வனப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

News image

கொடைக்கானல் பில்லர்ராக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கூட்டம்.

Updated On :4 மே 2026, 1:22 am IST

கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களைப் பாா்ப்பதற்கு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள்நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனத்துறையினருக்கும், சுற்றுலா வாகன ஓட்டுநா்களுக்கும் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சரவணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (மே 5) வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களை பாா்ப்பதற்கு கட்டணம் வசூலிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தாா்.

அதுவரை சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் மட்டும் கொடைக்கானல் வனப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களான பில்லா் ராக், குணா குகை, மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவுக் கட்டணம் வசூல் செய்யப்படமாட்டது என அறிவித்தாா்.

இதையடுத்து, கடந்த இரண்டு நாள்களாக கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களை இலவசமாகப் பாா்வையிட்டு மகிழ்ந்தனா்.

வழக்கம்போல வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் பாம்பாா்புரம், அப்சா்வேட்டரி, ஏரிச் சாலை, மூஞ்சிக்கல், உட்வில் சாலை, பூங்கா சாலை, நகராட்சி சாலைகளில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரியில் மாலை நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும், நடைபயிற்சி மேற்கொண்டும் மகிழ்ந்தனா்.