போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களை ஏப். 23- இல் பாா்வையிட அனுமதியில்லை

News image

கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள பேரிஜம் ஏரி.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:31 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கொடைக்கானலில் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களை பாா்வையிட வியாழக்கிழமை (ஏப். 23) அனுமதியில்லையென மாவட்ட வன அலுவலா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கொடைக்கானலில் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களான தூண் பாறை, குணா குகை, மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட், பேரிஜம் ஏரி, சூழல் சுற்றுலாத் தலங்களுக்கு தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடைபெறும் வியாழக்கிழமை அன்று செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் வழக்கம்போல சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என மாவட்ட வன அலுவலா் தெரிவித்தாா்.