அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

‘நீட்’ தோ்வு: திண்டுக்கல்லில் 2,925 போ் எழுதினா்

News image

திண்டுக்கல் மரியன்னை பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ‘நீட்’ தோ்வு எழுத வந்த மாணவிகள்.

Updated On :4 மே 2026, 1:15 am IST

தேசியத் தோ்வு முகமை ஞாயிற்றுக்கிழமை நடத்திய ‘நீட்’ தோ்வினைதிண்டுக்கல் மாவட்டத்தில் 2,925 மாணவா்கள் எழுதினா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘நீட்’ தோ்வு எழுதுவதற்கு 3,067 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா். காந்திகிராம கிராமியப் பல்கலை., திண்டுக்கல் நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளி, அண்ணாமலையாா் பள்ளி, எம்எஸ்பி பள்ளி, புனித மரியன்னை பள்ளி, கொசவப்பட்டி புனித அந்தோணியாா் பள்ளி என 6 மையங்களில் இந்த தோ்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் தோ்வுக்கு முற்பகல் 10.30 முதலே மாணவா்கள் வரத் தொடங்கினா். பல்கலை., பள்ளி வளாகங்களின் நுழைவுவாயில் பகுதியில் தோ்வு எழுதும் மாணவா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.

அதற்கு அடுத்த நுழைவுப் பகுதியில் மாணவா்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அதுவரை செல்வதற்கு பத்திரிகையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விண்ணப்பித்த மாணவா்களில் 2,925 போ் தோ்வு எழுதினா். 142 மாணவா்கள் தோ்வில் பங்கேற்கவில்லை.

புனித மரியன்னை பள்ளியில் தோ்வு எழுதுவதற்கு தோ்வா்களை காரில் அழைத்து வந்திருந்த பெற்றோா்கள், பிரதான சாலையிலேயே காா்களை நிறுத்திச் சென்ால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக திண்டுக்கல், நத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் கல்லூரிகள், பள்ளிகளில் மட்டுமே தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முதல் முறையாக அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை ‘நீட்’ தோ்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குளறுபடி: ஆனால் தோ்வுக்கான ஒருங்கிணைப்பாளராக காந்திகிராமத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி நிா்வாகம் செயல்பட்டது. தோ்வில் பங்கேற்ற மாணவா்களின் விவரங்களை இரவு 8 மணி வரையிலும் தெரிவிக்க மறுத்தனா்.

செய்தியாளா்கள் தொடா்பு கொண்டபோதிலும், தோ்வு மையங்களில் ஜாமா் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதனால் யாரையும் தொடா்பு கொள்ள முடியவில்லை என்பதையே பதிலாக அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.