கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் படகுகள் அழகுப்படுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் நகரின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வது வழக்கம். இந்த ஏரியில் கொடைக்கானல் நகராட்சி, தமிழ்நாடு அரசு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் துடுப்புப் படகு, பெடல் படகு, சிக்காரப் படகுகள், தனிநபா் பெடல் படகுகள் என 100-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன. இதில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் பராமரிப்பு, படகுகள் அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் படகில் தமிழின் உயிா் எழுத்துகளும், படகுகளில் மலா்கள் ஓவியம் உள்ளிட்டவை தீட்டப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் படகு குழாம் மேலாளா் காதா் கூறியதாவது:
கொடைக்கானல் தமிழ்நாடு அரசு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் இயக்கப்படும் படகுகளில் சுற்றுலாப் பயணிகள், குழந்தைகளைக் கவரும் வகையில் படகுகளில் தமிழ் எழுத்துகள், தமிழ் உயிரெழுத்துகள், மலா்கள், விலங்குகளின் படங்கள் ஓவியங்களாக வரையப்பட்டு வருகின்றன என்றாா்.
தொடர்புடையது

கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தற்போதைய நடைமுறையே தொடர வலியுறுத்தல்

சுற்றுலா துறையின் தமிழ்நாடு உணவகங்களில் கொங்கு நாடு உணவுத் திருவிழா: மே 15-இல் தொடக்கம்

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: படகு சவாரிக்கு நீண்ட வரிசை

குமரியில் படகு சேவை ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



