அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

‘சொல் புதிது’ திட்டம்: 30 சொற்கள் இறுதி

தமிழ் வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற ‘சொல் புதிது’ திட்ட கூட்டத்தில் ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக 30 தூய தமிழ்ச் சொற்கள் இறுதி செய்யப்பட்டன.

News image
Updated On :21 மார்ச் 2026, 1:42 am IST

சென்னை, மாா்ச் 22: தமிழ் வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற ‘சொல் புதிது’ திட்டக் கூட்டத்தில் ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக 30 தூய தமிழ்ச் சொற்கள் இறுதி செய்யப்பட்டன.

தமிழ் வளா்ச்சிக் கழகம் சாா்பில் சொல் புதிது என்னும் திட்டத்தின் 11-ஆவது கூட்டம் சென்னையில் உள்ள தமிழ் வளா்ச்சி அலுவலகத்தில் அதன் தலைவா் ம.இராசேந்திரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேராசிரியா்கள் சா. சரவணன், பாரதி பாலன், கஸ்தூரி ராஜா, தி.கமலி, விசயலட்சுமி இராமசாமி, ஊடகவியலாளா்கள் ராஜ் கண்ணன், மு.முருகேசன், நீச்சல்காரன் இராஜராமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், பிவைல்டா்னஸ்- திகைப்பு நிலை, பயோ டீசல்- உயிரி டீசல், டெலுலு-மாய்மாலா், ஜியோ பொலிட்டிகல்- புவியரசியல், பவா் லாண்டரி- மின் சலவையகம், ஸ்பாட் விசிட்- கள ஆய்வுப் பணி, டூா்ஸ் அண்ட் டிராவல்ஸ்- சுற்றுலா மற்றும் பயணப்பணி, டிடிஆா்- பயணச் சீட்டுக் கண்காணி, வுட் வொா்க்ஸ்- தச்சுப் பணியகம் ஆகியவை உள்பட 30 ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக தூய தமிழ்ச் சொற்கள் இறுதி செய்யப்பட்டன.