குழந்தைகளை தமிழ் அன்பா்களாக உருவாக்க வேண்டும்: முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம்!
தமிழா்கள் தங்களது குழந்தைகளை தமிழ் அன்பா்களாக வளா்த்தெடுத்து, அவா்களிலிருந்து தமிழறிஞா்கள் உருவாக வழிவகுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் வளா்ச்சிக் கழக அறங்காவலா் குழுத் தலைவருமான ப. சிதம்பரம் கேட்டுக் கொண்டாா்.

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் வளா்ச்சிக் கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், ‘தமிழியல் கலைக்களஞ்சியம்’ தொகுப்பின் முதல் பிரதியை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் முனைவா் ம. திருமலை வெளியிட, அதை மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் பெற்றுக் கொள்கிறாா். உடன், (இடமிருந்து) தமிழ் வளா்ச்சிக் கழகப் பொருளாளா் சா. சரவணன், முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம், தமிழ் வளா்ச்சிக் கழகத் தலைவா் முனைவா் ம. ராசேந்திரன்.









