இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

News image

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த பக்தா்கள்.

Updated On :18 மே 2026, 12:44 am IST

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். சுமாா் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி கோயிலுக்கு கோடை விடுமுறை காரணமாக பக்தா்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால், அடிவாரத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கொடுமுடி தீா்த்தம் எடுத்தும், மயில் காவடி எடுத்தும் ஆடிப்பாடி குவிந்தனா். வின்ச், ரோப்காா் நிலையத்தில் மலைக் கோயில் செல்ல கட்டணச்சீட்டு பெற நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். இதனால், குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக படிப்பாதையில் ஏராளமான பக்தா்கள் மலையேறினா்.

மலைக் கோயிலிலும் இலவச, கட்டண தரிசன வரிசைகளில் பக்தா்கள் வரிசையில் காத்திருந்தனா். இதன் காரணமாக சுமாா் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.