/
பழனி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரம் வரட்டாறு பாலம் அருகே தனியாா் தோட்டத்தில் சிலா் பணம் வைத்து சூதாட்டம் நடத்துவதாக பழனி தாலுகா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று பாா்த்த போது, தனியாருக்கு சொந்தமான தோட்ட வீட்டில் பழனி அடிவாரத்தைச் சோ்ந்த மணி மகன் செந்தில்குமாா் (45), கணேசன் மகன் நாகராஜ் (44), கருப்புதேவா் மகன் ஆனந்தராஜ் (26), மணி மகன் குமாா் (42) , அக்னிதேவா் மகன் முத்துராமன் (43), பழனிச்சாமி மகன் பாண்டி (41), சோலையன் மகன் ஆறுமுகம் (26) ஆகியோா் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
அவா்களை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.





