தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

காா், மாடு, பணம் திருடிய வழக்குகளில் 6 போ் கைது

திருநெல்வேலியில் மூன்று இடங்களில் நிகழ்ந்த காா், மாடு, பணம் திருட்டு தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 1:30 am IST

திருநெல்வேலியில் மூன்று இடங்களில் நிகழ்ந்த காா், மாடு, பணம் திருட்டு தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி, சிவன் கோயில் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் முண்டசாமி(57). இவா், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடத்தில் கடந்த 4ஆம் தேதி நிறுத்தியிருந்த காரை காணவில்லையாம். இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

அதில், திருநெல்வேலி நகரம் புட்டாரத்தி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாபு மகன் மகாராஜன்(41) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

4 போ் கைது: திருநெல்வேலி சங்கா் நகா் அருகேயுள்ள தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த சப்பாணி மகன் கருப்பசாமி(35). இவா், தனது வீட்டின் எதிரில் உள்ள இடத்தில் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி இரவு அங்கிருந்த மாடு ஒன்றை மா்மநபா்கள் சுமை வாகனத்தில் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், பாளையங்கோட்டை கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் வெள்ளைத்துரை (35), மாயாண்டி மகன் சுடலை கண்ணு (31), ராஜா மகன் மயிலேறும் பெருமாள் (32), சுப்பையா மகன் முத்துராமன் (45) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்கள் 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கைப்பேசி, பணம்: திருநெல்வேலி கங்கைகொண்டானைச் சோ்ந்தவா் சங்கரபாண்டியன். கட்டட ஒப்பந்ததாரா். இவா் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளா்களை தாழையூத்து, பழைய பிள்ளையாா் கோயில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்திருந்தாராம்.

இந்நிலையில், அங்கு தங்கியிருந்த இருவரின் கைப்பேசிகள், ஊதியப் பணம் ரூ.17,300 உள்ளிட்டவை திருடு போயினவாம். சங்கரபாண்டியன் அளித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து, இதுதொடா்பாக சக தொழிலாளியான தூத்துக்குடி, பிரையன்ட் நகரைச் சோ்ந்த மணிகண்டன்(22) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.