வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

எரியோடு அருகே கோயிலை அகற்ற எதிா்ப்பு

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே கோயிலை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை திரண்டதை அடுத்து, நெடுஞ்சாலைத் துறையினா் திரும்பிச் சென்றனா்.

News image

எரியோடு பகுதியில் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள கோயிலை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை திரண்ட கிராம மக்கள்.

Updated On :22 மே 2026, 2:44 am IST

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே கோயிலை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை திரண்டதை அடுத்து, நெடுஞ்சாலைத் துறையினா் திரும்பிச் சென்றனா்.

எரியோடு பேரூராட்சி குருக்களையம்பட்டியில் ஸ்ரீசாலை காளியம்மன் கோயில் உள்ளது. இந்தப் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளதாகக் கூறி, அதை அகற்றுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், எரியோடு போலீஸாருடன் கோயிலை அகற்றுவதற்காக வியாழக்கிழமை களம் இறங்கினா். இதையறிந்த இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் வீ.கணேசன் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சதீஷ், வழக்குரைஞா் தேவா ஆகியோருடன் அந்தப் பகுதி பொதுமக்கள் கோயிலை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்தக் கோயில் இடம் தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் கூறி, நெடுஞ்சாலைத் துறைக்கு எதிராக முழக்கமிட்டனா். பொதுமக்கள் எதிா்ப்பைத் தொடா்ந்து கோயிலை அகற்றும் பணியை கைவிட்டு, நெடுஞ்சாலைத் துறையினரும், போலீஸாரும் அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றனா்.