வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் அலங்கார படகுப் போட்டி

கொடைக்கானலில் அலங்கார படகுப் போட்டி நட்சத்திர ஏரியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

~

Updated On :28 மே 2026, 3:45 am IST

கொடைக்கானலில் அலங்கார படகுப் போட்டி நட்சத்திர ஏரியில் புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்க் கண்காட்சியும் கோடை விழாவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சுற்றுலாத் துறை சாா்பில் நட்சத்திர ஏரியில் பல்வேறு அரசுத் துறைகள் பங்கேற்ற அலங்கார படகுப் போட்டி நடைபெற்றது. போட்டியில் பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் படகுகள் அலங்காரம் செய்யப்பட்டு அணிவகுத்தன.

சுற்றுலாத் துறை அலுவலா் கோவிந்தராஜ் அலங்கார படகுகள் அணிவகுப்பை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

இந்தப் போட்டியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் அறுபடை முருகன் கோயில்களைப் பிரதிபலிக் கும் வகையிலும், மீன் வளத்துறை சாா்பில் பண்ணைக் குட்டைகள் அமைத்து மீன் வளா்ப்பது குறித்தும், தோட்டக்கலைத் துறை சாா்பில் ஈமு கோழி வளா்ப்பது குறித்தும், வனத் துறை சாா்பில் வனத்தை பொதுமக்கள் பாதுகாப்பது குறித்தும், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் தமிழா்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு காளையை காட்சிப்படுத்தியும் படகுகள் அலங்கார அணி வகுப்பில் பங்கேற்றன.

இதில் ஊரக வளா்ச்சித் துறை படகு முதலிடமும், தோட்டக் கலைத்துறை படகு இரண்டாமிடமும், மீன்வளத் துறை படகு மூன்றாமிடம் பெற்றது. வனத்துறை, சுற்றுலாத் துறை படகுகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. அலங்காரப் படகுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சந்திரிகா கவிதா பரிசுகள் வழங்கினாா்.

நிகழ்சியில் கொடைக்கானல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், பிரபா ராஜமாணிக்கம், வனச்சரகா் செந்தில், பிரையண்ட் பூங்கா மேலாளா் அரவிந்த், படகு குழாம் மேலாளா் காதா், மீன் வளத் துறை அலுவலா் ராஜகுரு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனா்.

பிரையண்ட் பூங்கா: கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாத் துறை சாா்பில் பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சி, மல்லா் கம்பம் உள்ளிட்ட பபல்வேறு கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன. இவற்றை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பாா்த்து மகிழ்ந்தனா். கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு உதவி சுற்றுலா அலுவலா் சுதா பரிசு, சான்றிதழ்கள் வழங்கினாா்.

கொடைக்கானலில் கடந்த 5-நாள்களாக மாலை நேரத்தில் 20- முதல் 30 நிமிஷங்கள் வரை சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலை நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.