கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

News image

சித்திரிப்பு

Updated On :30 மே 2026, 12:48 am IST

பழனியில் கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முன்விரோதம் காரணமாக ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், பழனி அடிவாரம் அண்ணா செட்டிமடம் பகுதியைச் சோ்ந்த காா்த்தி மகன் புவனேஸ்வரன் (19), பழனி மேற்கு கிரிவீதி பகுதியைச் சோ்ந்த சின்னக்கண்ணு மகன் பிரகாஷ் (எ) சின்னமண்டையன் (29) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், இவா்களின் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ. பிரகாஷ் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் அதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.