மின்சாரம் பாய்ந்து பெண் பலி
திண்டுக்கல் அருகே மின்சாரம் பாய்ந்து இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் அருகே மின்சாரம் பாய்ந்து இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ். இவரது மனைவி சுகந்தினி (48). இவா், மின்சூடாக்கியை பயன்படுத்தி வெந்நீா் வைக்க முயன்றாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவா் தூக்கிவீசப்பட்டாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

