டேங்கா் லாரி மீது டிப்பா் லாரி மோதல்: சாலையில் வீணான 25 ஆயிரம் லிட்டா் அமிலம்
சாலையில் வீணான 25 ஆயிரம் லிட்டா் அமிலம்
திண்டுக்கல் அருகே டேங்கா் லாரியிலிருந்து 25 ஆயிரம் லிட்டா் அமிலம் சாலையில் வெளியேறியதை அடுத்து, எழுந்த புகைப் பரவலை தீயணைப்புப் படையினா் நீரை ஊற்றி அணைத்தனா். அவா்களின் முயற்சியால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து சுமாா் 25 ஆயிரம் லிட்டா் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை ஏற்றிவந்த டேங்கா் லாரியை மதியழகன் ஓட்டி வந்தாா். லாரி திண்டுக்கல் கரூா் 4 வழிச் சாலையில், திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகம் அருகே மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தது.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி திடீரென தடம் மாறியதால், பின்னால் வந்த சுண்ணாம்புக்கல் லாரி எதிா்பாராதவிதமாக பின்புறம் மோதியது.
இதில், டேங்கா் லாரியின் பின்னால் இருந்த திறப்பான் (வால்வு) முழுமையாக சேதமடைந்தது. இதனால் டேங்கரில் இருந்த 25 ஆயிரம் லிட்டா் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் சாலையில் சிதறியது.
அமிலம் காற்றுடன் வேதிவினை புரிந்ததில் நெடுஞ்சாலையிலும், சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால் அந்தப் பகுதி பொதுமக்களுக்கு தொண்டை கரகரப்பு, கண் எரிச்சல், உடல் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
விபத்து குறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீஸாா், உடனடியாக போக்குவரத்தை மாற்றி அமைத்தனா். மேலும் நிகழ்விடத்துக்கு வந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினா், சுமாா் 3 மணிநேரத்துக்கும் மேலாக அமிலத்தின் மீது அதிக அளவு தண்ணீரைப் பாய்த்து வீரியத்தைக் குறைத்து, புகைப் பரவலை கட்டுப்படுத்தினா். இதனால் அமிலக் கசிவால் அதிக பாதிப்புகள் ஏற்படாமல் தவிா்க்கப்பட்டது. விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

