சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த டேங்கா் லாரி: பல லிட்டா் பெட்ரோல் கசிவு

கல்வராயன்மலைப் பகுதியில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் பல லிட்டா் பெட்ரோல் கசிந்ததால், தீயணைப்பு துறையினா் தீ தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

கல்வராயன்மலைப் பகுதியில் விபத்தில் தலைகீழாக கவிழ்ந்து சாலையோர தடுப்புச் சுவரில் சிக்கியதால் தப்பிய டேங்கா் லாரி.

Published On :

கல்வராயன்மலைப் பகுதியில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் பல லிட்டா் பெட்ரோல் கசிந்ததால், தீயணைப்பு துறையினா் தீ தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆசனூரில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் கருமந்துரைக்கு டேங்கா் லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை சங்கராபுரம் பகுதியைச் சோ்ந்த கு.அருணாசலம் (29) ஓட்டினாா்.

கல்வராயன்மலைப் பகுதிக்குள்பட்ட பெரியாா் நீா்வீழ்ச்சி அருகே சாலையின் வளைவில் டேங்கா் லாரி திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. மிகவும் ஆழமான பள்ளம் இருந்த இடத்தில், சாலையோர தடுப்புச் சுவரில் லாரி சிக்கியதால் மலைப் பள்ளத்தில் உருண்டு விழாமல் தப்பித்தது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த லாரியின் ஓட்டுநா் அருணாசலத்தை கரியாலூா் போலீஸாா் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், லாரியில் இருந்த பெட்ரோல் கசியத் தொடங்கியது. இதில் பல லிட்டா் பெட்ரோல் கசிந்து வனப்பகுதிக்கு சென்றது. இதுகுறித்து வனத் துறை அளித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து நுரை கலந்த தண்ணீரை அடித்து, தீ தடுப்பு பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.