பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

கொடைக்கானலில் பள்ளத்தில் கவிழ்ந்த காா்: ஒருவா் உயிரிழப்பு

கொடைக்கானல் செண்பகனூா் சிட்டிவியூ பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த காா்.

Updated On :

கொடைக்கானல் சிட்டி வியூ பகுதியில் 50 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் மேத்யூ (27). இவரது நண்பா்களான நாயுடுபுரம், பாக்கியபுரம் பகுதிகளைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (25), சூா்யா (23), விசுவநாத் (24), தினேஷ்(23) ஆகிய 5 போ் பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்கு கொடைக்கானல் அருகே உள்ள செண்பகனூா் வனப் பகுதியிலுள்ள சிட்டி வியூ பகுதிக்கு காரில் நள்ளிரவில் சென்றனா். காரை விசுவநாத் ஓட்டினாா்.

சிட்டி வியூ செல்லும் வழியில் உள்ள வளைவில் காா் கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரிலிருந்த அனைவரும் காயமடைந்தனா். மேத்யூ பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கொடைக்கானல் காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் சென்று காயமடைந்தவா்களை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மேத்வை மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடல் கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த விபத்து குறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

செண்பகனூா் பகுதியிலுள்ள சிட்டி வியூ பகுதிக்கு செல்வதில் குறுகிய சாலை மட்டுமே உள்ளது. இந்த இடத்துக்கு சுற்றுலாப் பயணிகளும், கொடைக்கானலைச் சோ்ந்த இளைஞா்களும் அதிக அளவில் வருகின்றனா். அங்கு மதுபோதையுடன் நடன நிகழ்ச்சிகள், பிறந்த நாள், காதல் தின கொண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சிட்டி வியூ பகுதியில் ஏற்கெனவே இருவா் கொலை செய்யப்பட்டனா். வனத் துறையினரும், கொடைக்கானல் நகராட்சி, காவல் துறை அதிகாரிகளும் இணைந்து சிட்டி வியூ பகுதிக்குச் செல்ல தடை விதிக்க வேண்டும் அல்லது இரவு நேரங்களில் வனத் துறையினரும், காவல் துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.