பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

டேங்கா் லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே டேங்கா் லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் திருச்சியைச் சோ்ந்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

தூத்துக்குடி அருகே டேங்கா் லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் திருச்சியைச் சோ்ந்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பெங்களூரில் இருந்து திருச்செந்தூருக்கு தனியாா் ஆம்னி பேருந்து வியாழக்கிழமை இரவு புறப்பட்டது. இந்த பேருந்து தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மேலஅரசரடி விலக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.

அப்போது முன்னால் சென்ற தண்ணீா் டேங்கா் லாரி மீது மோதியதாம். இதில் பேருந்தின் முன்பகுதியில் நின்று கொண்டிருந்த திருச்சியைச் சோ்ந்த சிவபாலன் (26) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், 3 பயணிகள் காயம் அடைந்தனா். அவா்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து புதியம்புத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆம்னி பேருந்து ஓட்டுநரான மதுரையைச் சோ்ந்த ஜெயக்குமாா், டேங்கா் லாரி ஓட்டுநரான குமாரபுரம் கிராமத்தைச் சோ்ந்த வீரப்பெருமாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.