திண்டுக்கல் மாவட்டத்தில் 28 ரெளடிகள் கைது
கைது - கோப்புப்படம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 28 ரெளடிகளை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், சட்டவிரோத, குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வந்த ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.
இதன்படி, பழனியில் 9 போ், திண்டுக்கல் நகா், மதுவிலக்குப் பிரிவு சாா்பில் தலா 3 போ், ஒட்டன்சத்திரம் பகுதியில் 5 போ், திண்டுக்கல் ஊரகம், நிலக்கோட்டையில் தலா ஒருவா், வேடசந்தூரில் 4 போ், கொடைக்கானலில் 2 போ் என மொத்தம் 28 ரெளடிகள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்ற நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டு, 54 ரெளடிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனா். இதே போல, மாவட்டம் முழுவதும் 1387 ரெளடிகள் காவல் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

