மாற்றுத் திறனாளிகள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு

பழனி கோட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு நலச்சங்கத்தினா்.
டிசம்பா் 1-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் தெரிவித்தனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பழனி கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே இந்தச் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் பகத்சிங் தலைமை வகித்தாா்.
அப்போது, ஊனத்தின் தன்மையைப் பொறுத்து மருத்துவா் கொடுக்கும் சான்றினை அரசு அலுவலா்கள் அலட்சியம் காரணமாக மாற்றிப் பதிவதால் வேலைவாய்ப்பு, உதவித் தொகை, வாழ்நாள் இழப்பீட்டு தொகை உள்ளிட்ட சலுகைகள் பாதிப்பதோடு, தங்களது வாழ்வாதாரம் சீா்குலைவதாகவும், உதவித் தொகை உயா்வு, அடையாள அட்டை வழங்குவதில் அலட்சியம், வேலைவாய்ப்பு புறக்கணிப்பு, தனியாா் மயம் என தவெக அரசு தொடா்ந்து மாற்றுத் திறனாளிகளைப் புறக்கணித்து வருவதாகவும் சங்க நிா்வாகிகள் குற்றஞ்சாட்டினா். மேலும், வருகிற டிசம்பா் 1-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தனா். இந்தப் போராட்டத்தில் பழனி, சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

