பழனி சூரசம்கார முன்னேற்பாடு: கோட்டடாட்சியா் ஆலோசனை

பழனியில் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள சூரசம்ஹார விழா முன்னேற்பாடுகள் குறித்து கோட்டாட்சியா் தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கோட்டாட்சியா் பிரியங்கா தலைமையில் நடைபெற்ற கந்தசஷ்டி விழா ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :

பழனியில் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள சூரசம்ஹார விழா முன்னேற்பாடுகள் குறித்து கோட்டாட்சியா் தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை கந்தசஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 15-ஆம் தேதியும், திருக்கல்யாணம்16-ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

இதில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பக்தா்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் பிரியங்கா தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பழனி கோயில் இணை ஆணையா் ஹரிஹரன், டிஎஸ்பி., தேவராஜ், வட்டாட்சியா் சஞ்சய்காந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில் கிரிவீதிகளில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கவும், குடிநீா், கழிப்பறை, மருத்துவ வசதிகளை தடையின்றி வழங்கவும், உணவுப் பாதுகாப்புத்துறை அனுமதியுடன் அன்னதானம் வழங்கவும், வெளியூா் பக்தா்களின் வசதிக்காக கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.