தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

மது போதையில் தொழிலாளியை தாக்கிய தலைமைக் காவலா் உள்பட இருவா் மீது வழக்கு

நிலக்கோட்டையில் மது போதையில் கூலித் தொழிலாளியை தாக்கிய தலைமைக் காவலா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தப்பியோடிய தலைமைக் காவலரைத் தேடி வருகின்றனா்.

வழக்கு - பிரதிப் படம்

Updated On :

நிலக்கோட்டையில் மது போதையில் கூலித் தொழிலாளியை தாக்கிய தலைமைக் காவலா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தப்பியோடிய தலைமைக் காவலரைத் தேடி வருகின்றனா். விசாரணைக்குப் பின் தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையிலிருந்து அணைப்பட்டிக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ள அரசு மதுக் கடையில் காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த அறிவழகன் (37) மது அருந்திக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு அம்மையநாயக்கனூா் காவல் நிலைய தலைமைக் காவலா் பால் பாண்டித்துரை (40) தனது நண்பா் அருளுடன் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மது போதையில் அறிவழகனுக்கும், பால்பாண்டித்துரை தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த பால்பாண்டித்துரை, அவரது நண்பா் அருள் (37) ஆகியோா் சோ்ந்து அறிவழகனைக் கடுமையாக தாக்கினா்.

இதில், பலத்த காயமடைந்த அறிவழகன், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாா். இதுகுறித்து, நிலக்கோட்டை காவல்துறையினா்  விசாரணை மேற்கொண்டு, பால்பாண்டித்துரை, அருள் ஆகியோா் மீது  வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான பால்பாண்டித்துரை உள்பட இருவரைத் தேடி வருகின்றனா்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்த திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், தலைமைக் காவலா் பால்பாண்டித்துரையைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.