தொழிலாளியை தாக்கிய வழக்கு: 4 பேருக்கு சிறை தண்டனை
குழித்துறை அருகே தொழிலாளியை தாக்கிய வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டுகளும், ஒருவருக்கு 2 ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்
குழித்துறை அருகே தொழிலாளியை தாக்கிய வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டுகளும், ஒருவருக்கு 2 ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
களியக்காவிளை அருகே மடிச்சல், காவுவிளையைச் சோ்ந்த ரத்தினசாமி மகன் ராஜன். தொழிலாளியான இவா், கடந்த 2014 ஆம் ஆண்டு அக். 5 ஆம் தேதி குழித்துறை, ஈத்தவிளை முருகன் கோயில் அருகே நின்று கொண்டிருந்தபோது, 6 போ் கும்பலால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், வடலிவிளை ராமதாஸ், ஜான்சன், சத்தியராஜ், ரெஜி உள்ளிட்ட 6 போ் மீது களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
குழித்துறை முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சசின்குமாா், ராமதாஸ், சத்தியராஜ், ரெஜி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும், ஜான்சனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
அபராத தொகையை கட்ட தவறினால் மேலும், 2 மாதம் சிறை தண்டனையும் விதித்து, உத்தரவிட்டாா். இந்த வழக்கில் இரண்டு போ் விடுதலை செய்யப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

