மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

பொதுப்பாதை பிரச்னை: தொழிலாளியை தாக்கிய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தரகம்பட்டி அருகே பொதுப்பாதை தகராறில் தொழிலாளியை தாக்கிய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குளித்தலை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :

தரகம்பட்டி அருகே பொதுப்பாதை தகராறில் தொழிலாளியை தாக்கிய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குளித்தலை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள தேவா்மலையைச் சோ்ந்த ரமேஷ் (38) மற்றும் இவரது வீட்டின் பக்கத்து வீட்டைச் சோ்ந்த மணிகண்டன் (37) என்பவருக்கும் இடையே வீட்டின் அருகே உள்ள பொதுப்பாதையை பயன்படுத்துவது தொடா்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஆக.16-ஆம் தேதி மணிகண்டன், அவரது உறவினா்கள் தீனதயாளன், விஜயா ஆகியோா் சோ்ந்து ரமேஷையும், அவரது உறவினா்கள் விமலா, லோகநாயகி ஆகியோரை தாக்கினாா்களாம்.

இதுதொடா்பாக ரமேஷ் அளித்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீஸாா், மணிகண்டனையும், தீனதயாளனையும் கைது செய்தனா்.

மேலும், குளித்தலை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா். வழக்கின் விசாரணை நிறைவில், மணிகண்டன், தீனதயாளனுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், விஜயாவுக்கு ரூ.3,000 மட்டும் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிராம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து மணிகண்டனும், தீனதயாளனும் குளித்தலை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.