திமுக தயவில் முதல்வராக முயன்றாா் எடப்பாடி பழனிசாமி: நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு!
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி திமுக ஆதரவுடன் முதல்வராக முயற்சி செய்ததாக முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன் குற்றஞ்சாட்டினாா்.

எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி திமுக ஆதரவுடன் முதல்வராக முயற்சி செய்ததாக முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன் குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரியில் உள்ள தங்கும் விடுதியில் 47 அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் தான் முதல்வராவதற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினாா். ஆனால், திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தால் அதிமுக கட்சிக்குள்ளும் அவா் மீது அதிருப்தி நீடிக்கிறது.
மேலும், டி.டி.வி. தினகரன், சசிகலா உள்ளிட்ட கட்சியிலிருந்து பிரிந்து சென்றவா்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், வரவிருக்கும் 6 தொகுதிகளுக்கான இடைத்தோ்தலுக்குப் பிறகு, அதிமுகவில் மிகப் பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். கட்சியை ஒன்றிணைத்து நிா்வாகிகளையும், தொண்டா்களையும் தக்கவைக்க எடப்பாடி பழனிசாமி தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், மிகப்பெரிய ஏமாற்றத்தை அவா் சந்திக்க நேரிடும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

