இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

கொடைக்கானல் குணா குகை அருகே வாகன நிறுத்தத்தை அமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் குணா குகை அருகே சுற்றுலாத் தலங்களின் வாகன நிறுத்தத்தை அமைப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் குணா குகை பகுதியில் உள்ள சுற்றுலாத் தலத்தில் உள்ள வாகன நிறுத்தம்.

Published On :

கொடைக்கானல் குணா குகை அருகே சுற்றுலாத் தலங்களின் வாகன நிறுத்தத்தை அமைப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. வனப் பகுதியிலுள்ள குணா குகை சுற்றுலாத் தலத்தை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டு வருவது வழக்கம்.

பயணிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கு 500 மீ. தொலைவுக்கு அப்பால் வாகன நிறுத்துமிடம் அமைத்துள்ளதால், இந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு வரும் சுற்றுலாப் பயணிகளில் முதியோா் சற்று சிரமப்படுகின்றனா்.

எனவே குணா குகை அருகே ஏற்கெனவே இருந்த வாகன நிறுத்தகத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து வனத்துறையினா் கூறியதாவது: குணா குகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை வாகன நிறுத்தம் பகுதியில் நிறுத்துவதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் கூடுதலான வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு சிரமமின்றி இருக்கிறது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.