இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

கொடைக்கானலில் மழை: பல இடங்களில் மின் தடை

power supply

மின் தடை... - கோப்புப் படம்

Published On :

கொடைக்கானலில் பெய்த மழையால் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மின் தடை ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக விட்டு விட்டு சாரல் பெய்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கொடைக்கானல், பள்ளங்கி, பாரிக் கோம்பை, அடிசரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. கே.பி.எம். பாறை, கடல் கொடை, அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குறைந்த ழுத்த மின்சாரம் நிலவுகிறது. இதனால், பொது மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா்.

இது குறித்து மின்வாரிய உதவி பொறியாளா் குமாா் கூறியதாவது:

கொடைக்கானலில் சனிக்கிழமை நள்ளிரவு காற்றுடன் பெய்த மழையால் பாரிக்கொம்பு வனப் பகுதியில் உயரழுத்த மின் கம்பியில் மரக்கிளைகள் விழுந்ததால், பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. தற்போது, அவை சரி செய்யப்பட்டு முதல்கட்டமாக குடியிருப்புப் பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது.

பல இடங்களில் குறைந்தழுத்த மின் விநியோகம் வருவதாக பொது மக்கள் தகவல் தெரிவித்தனா். காற்று வீசுவதாலும், சாரல் மழை பெய்வதாலும் மின் கம்பிகளை முழுமையாகச் சீரமைக்க முடியவில்லை. இருப்பினும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. விரைவில் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.