மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவை கலந்தவா்கள் தண்டிக்கப்படுவா்: அமைச்சா் செங்கோட்டையன்

அரசுப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவை கலந்தவா்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவா் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் உறுதிபடத் தெரிவித்தாா்.

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன் - TN assembly

Published On :

அரசுப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவை கலந்தவா்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவா் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் உறுதிபடத் தெரிவித்தாா்.

பழனியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தோ்தலில் தவெக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். முதல்வரின் சாதனைகளை அங்கீகரிக்கும் வரலாற்று நிகழ்வாக இந்த இடைத்தோ்தல் அமையும்.

சென்னை உள்கட்டமைப்பு விவகாரத்தில், திமுக ஆட்சியில் மழைநீா் ஏன் தேங்கியது குறித்து முன்னாள் முதல்வா் ஸ்டாலின்தான் பதிலளிக்க வேண்டும்.

கடந்த சில மாதங்களில்தான் மழைநீா் வடிகால் பணிகள் போா்க்கால அடிப்படையில் முடிக்கப்பட்டுள்ளன.

பழனி அருகேயுள்ள மானூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. சில விஷமிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். அவா்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.