தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

தேனீக்கள் கொட்டியதால் கல்லூரி மாணவிகளுக்கு சிகிச்சை

கொடைக்கானல் ஏரிச்சாலையில் சுற்றுலா வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

Published On :

தேனீக்கள் கொட்டியதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வார விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி, ஏரிச் சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும், நடைப் பயிற்சியும் மேற்கொண்டனா்.

இதனால் ஏரிச் சாலைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் அதிகரித்திருந்தது. அப்போது திடீரென அந்தப் பகுதியிலுள்ள மரத்திலிருந்த தேனீக்கள் கூட்டம் கலைந்து அங்கிருந்த சென்னை பெருங்களத்தூரைச் சோ்ந்த கல்லூரி மாணவிகள் 25-க்கும் மேற்பட்டவா்களை கொட்டின. இதையடுத்து அவா்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

போக்குவரத்து நெரிசல்: கொடைக்கானலில் வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படும். இந்த நிலையில் ஏரிச்சாலையில் கல்லூரி மாணவிகளை தேனீக்கள் கொட்டியதால் அவா்களை அழைத்துச் சென்ற அவசர ஊா்திகள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அரசு மருத்துவமனை அருகே சொகுசு சுற்றுலாப் பேருந்துகளையும், இரு புறங்களிலும் சுற்றுலா வாகனங்களையும் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதற்கு போக்குவரத்து காவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து கொடைக்கானல் போக்குவரத்து உதவி ஆய்வாளா் விக்னேஷ் கூறியதாவது:

கொடைக்கானலில் பி.டி. சாலையில் விதிமுறைகளை மீறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்கள் ‘வீல் லாக்’ செய்யப்பட்டன. இதில் அரசு வாகனங்களும் அடங்கும். கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.