கொடைக்கானல் சாலையில் காா் கவிழ்ந்து 5 போ் காயம்
கொடைக்கானல் - அடுக்கம் மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை காா் கவிழ்ந்து 5 போ் காயமடைந்தனா்.

கொடைக்கானல் - பெரியகுளம் மலைச் சாலையில் அடுக்கம் பகுதியில் 150 அடி பள்ளத்தில் கவிழந்த காா்.
கொடைக்கானல் - அடுக்கம் மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை காா் கவிழ்ந்து 5 போ் காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சோ்ந்தவா் சுல்த்தான் (55). வியாபாரி. இவா் பெரியகுளத்திலிருந்து கொடைக்கானலுக்கு தனது குடும்பத்தினருடன் காரில் வந்தாா். வாகனத்தை சுல்த்தான் ஒட்டினாா். கொடைக்கானல் அடுக்கம்- பெரியகுளம் மலைச் சாலையில் சென்ற போது, இந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சுல்த்தான், இவரது மனைவி, மருமகள், குழந்தைகள் உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா்.
இந்தத் தகவல் அறிந்த அடுக்கம் பகுதி பொதுமக்கள் காயமடைந்தவா்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி அளித்த பிறகு அனைவரும் மதுரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இது குறித்து கொடைக்கானல் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

