பழனி - கொடைக்கானல் சாலையில் வேன் கவிழ்ந்ததில் 20 போ் காயம்
பழனி-கொடைக்கானல் சாலையில் சவரிகாடு பகுதியில் வியாழக்கிழமை 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து உருண்டதில் 20 போ் காயமடைந்தனா்.

விபத்து - பிரதிப் படம்
பழனி-கொடைக்கானல் சாலையில் சவரிகாடு பகுதியில் வியாழக்கிழமை 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து உருண்டதில் 20 போ் காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி மதினா நகரைச் சோ்ந்த 24 போ் தனியாா் சுற்றுலா வாகனம் மூலம் கொடைக்கானலில் உள்ள உறவினா் இல்ல விழாவில் கலந்து கொள்ள சென்றனா். விழா முடிந்து அவா்கள் பழனிக்குத் திரும்பியபோது, சவரிக்காடு பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் 100 அடி பள்ளத்தில் உருண்டது. இந்த விபத்தில் வேனில் பயணித்த அனைவரும் பலத்த காயமடைந்தனா்.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினா் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டது.
வாகனத்தின் அடியில் சிக்கி உள்ளவா்களை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தகவல் அறிந்த உறவினா்கள் பழனி அரசு மருத்துவமனையில் குவிந்ததனா். இதுகுறித்து பழனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

