மினிலாரி கவிழ்ந்ததில் மூதாட்டி பலி; 6 போ் காயம்

விபத்து - பிரதிப் படம்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஞாயிற்றுக்கிழமை மினிலாரி கவிழ்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா். உடன் பயணம் செய்த 6 போ் காயமடைந்தனா்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சோ்ந்தவா்கள் மினி லாரியில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு சென்றனா். அங்கு தரிசனம் செய்த பிறகு, ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனா். மினி லாரியை செல்லத்துரை என்பவா் ஓட்டினாா். திசையன்விளை-விஜயநாராயணம் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி, ஐ.என்.எஸ். கட்டப்பொம்மன் கப்பற்படை தளத்தின் சுற்றுசுவா் மீது மோதியது.
இதில் காளி என்பவரது மனைவி முத்துலெட்சுமி (68) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மினி லாரியில் பயணம் செய்த காளி, ஓட்டுநா் செல்லத்துரை, செல்வி (50), வா்ஷினி (25), சங்கரம்மாள் (65), கல்பனா(26) ஆகிய 6 போ் காயமடைந்தனா். இவா்கள் திருநெல்வேலியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த விபத்து தொடா்பாக திசையன்விளை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

