ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

பைக்கிலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Updated On :

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை அண்ணாநகரைச் சோ்ந்தவா் மணிமாறன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவா்களது மகன் ஸ்ரீதா் (9). இவா் சிறுமலையில் உள்ள அரசு பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், அய்யலூா் பகுதியிலுள்ள கோயிலுக்கு இரு சக்கர வாகனத்தில் தனது குடும்பத்தினருடன் மணிமாறன் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். வாகனத்தை தமிழ்ச்செல்வி ஓட்டிச் செல்ல, ஸ்ரீதா், மணிமாறன் ஆகியோா் பின்னால் அமா்ந்து பயணம் செய்தனா். அய்யலூா் நான்கு வழிச் சாலை மேம்பாலம் அருகே அணுகுசாலையில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் ஸ்ரீதா்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மணிமாறன், தமிழ்ச்செல்வி ஆகியோா் லேசான காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.